2011 உலகக் கோப்பை வெற்றி சச்சினிற்கு பரிசு.. விராட் கோலி.!

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி 2011 உலகக் கோப்பை வெற்றி குறித்து கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இணையதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்
அந்த வகையில் விராட் கோலி மயங்க் அகர்வாளுடன் வீடியோ காலில் பேசியதில் பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார் அதில் உலகக்கோப்பை வெற்றி குறித்து சில விஷியங்களை கூறியுள்ளார்.
அதில் கூறிய விராட் கோலி உலகக் கோப்பையை வென்ற பிறகு உற்சாகத்தில் நான் சச்சினை என் தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தில் சுற்றி வந்தேன், மேலும் எங்கள் எல்லோருடைய உணர்வுகளும் சச்சினைச் சுற்றி தான் இருந்தது.
ஏனென்றால் இதுதான் உலகக் கோப்பையை வெல்ல கடைசி வாய்ப்பு. பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக பல சாதனைகள் மற்றும் வெற்றிகளை கொடுத்தார், மேலும் அதனால் 2011 உலகக் கோப்பை வெற்றி என்பது சச்சினுக்கு நாங்கள் அளித்த பரிசாகும என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025