விராட், ரோஹித் எல்லாம் ஓரம் போங்க! இன்ஸ்டாவில் சம்பவம் செய்த ஹர்திக் பாண்டியா!
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் லைக்குகளை பெற்ற இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட் கோலி, சச்சின், தோனி, ரோஹித் ஆகியோர் போடும் போஸ்டுகளுக்கு லைக்குகள் குவிந்துவிடும். இவர்களையே மிஞ்சும் அளவுக்கு ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் சம்பவம் ஒன்றை செய்து சாதனையையும் படைத்தது இருக்கிறார்.
அது என்ன சாதனை என்றால் இந்தியாவில் போஸ்ட் செய்து வெகுவிரைவில் ஒரு போஸ்டிற்கு 1 மில்லியன் லைக்குகளை வாங்கிய நபர் என்ற சாதனை தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா வெற்றிபெற்றபோது கோப்பையை வாங்கி மைதானத்தில் வைத்துக்கொண்டு ஹர்திக் காபி லேம் ஸ்டில் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டார்.
அந்த புகைப்படம் இவ்வளவு வைரலாகுமா என அவரே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தீ போல பரவியது. அவர் போஸ்ட் செய்து 6 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குகளை வாங்கி சாதனையை படைத்தது. இதுவரை இந்தியாவில் இருக்கும் பிரபலங்கள் யார் போஸ்ட் செய்தும் 6 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குகளை வாங்கியது இல்லை. இந்த சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ள காரணத்தால் விராட் கோலி, தோனி, ரோஹித் ரசிகர்களே ஆச்சரியத்தில் உள்ளனர்.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த போஸ்ட் 7 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குகளை வாங்கி இருந்தார். அவரை விட ஹர்திக் ஒரு நிமிடம் முன்னதாகவே 1 மில்லியன் லைக்குகளை வாங்கி இந்த சாதனையை படைத்திருக்கிறார். அது மட்டுமின்றி, ஹர்திக் பாண்டியா போட்ட அந்த போஸ்டுக்கு இப்போது 16 மில்லியனிற்கும் மேல் லைக்குகள் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram