இன்றைய நான்காவது டி .என்.பி .எல் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் Vs வி.பி. காஞ்சி வீரன்ஸ் மோதியது .இப்போட்டி திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக விஷால் வைத்யா , முகிலேஷ் ஆகிய இருவரும் களமிங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே வைத்யா ரன்கள் எடுக்காமல் வெளியேறினர்.இதை தொடர்ந்து முகிலேஷ் ஒரு ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் இறங்கிய பாபா அபராஜித் , சுரேஷ் லோகேஸ்வர் இருவரின் கூட்டணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தனர் இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.சிறப்பாக விளையாடிய பாபா அபராஜித்51 ரன்களும் , சுரேஷ் 29 ரன்களும் குவித்தனர். பின்னர் களமிங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியாக வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் எடுத்தனர். 151 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாரு கான் , அபிநவ் முகுந்த் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
அதிரடியாக விளையாடி வந்த ஷாரு கான் அரைசதம் அடிக்காமல் 40 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் இறங்கிய பிரடோஷ் ரஞ்சன் ஒரு ரன்னில் அவுட் ஆனார்.கடைசிவரை அதிரடியாக விளையாடி வந்த அபிநவ் முகுந்த் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இறுதியாக லைகா கோவை கிங்ஸ் அணி 2 விக்கெட்டை இழந்து 15.2 ஓவரில் 151 ரன்கள் அடுத்த வெற்றி பெற்றது.
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…