இன்றைய இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசீலாந்து அணி முதலில் பேட்டிஙை தேர்வு செய்தனர்.
நியூசீலாந்து அணியின் தொடக்க வீரர்களான குப்தில் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் களமிறங்கினர். குப்தில் ஆரம்பத்திலே சிறப்பாக விளையாட தொடங்கி 1 சிக்ஸ் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். ஆனால் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். கேன் வில்லியம்சன் மற்றும் நிக்கோலஸ் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த போது பிளெங்கெட் வீசிய பந்தில் வில்லியம்சன் 30 ரன்களுடன் வெளியேறினார். இதன் பின் களமிறங்கிய ரோஸ் டெய்லர் 15 ரன்னிலே தனது விக்கெட்டை இழந்தார்.
இதன் பின் நிக்கோலஸ் 55 ரன்கள், டாம் லதாம் 47 ரன்கள், ஜேம்ஸ் நிஷாம் 19, கொலின் டி கிராந்தோம் 16, மாட் ஹென்றி 4, டிரெண்ட் போல்ட் 1, மிட்செல் சான்ட்னர் 5 ரன்கள் குவித்துள்ளனர். 50 ஓவர்கள் முடிவில் நியூசீலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 241 ரன்கள் குவித்தனர்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களான கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியம் பிளெங்கெட் தலா 3 விக்கெட்களை பெற்றுள்ளனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…