Narayan jagadeesan [file image]
Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வீரர் தான் நாராயண் ஜெகதீசன். இவர் 2018-ம் ஆண்டு சிஎஸ்கே நிர்வாகத்தால் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அதன் பின் 2022-ம் ஆண்டு வரை சென்னை அணியில் இடம் பெற்றிருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தின் போது கொல்கத்தா அணி இவரை 90 லட்சம் ரூபாய்க்கு எடுத்தனர்.
கடந்த 2023-ம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஒரு சில போட்டிகளில் ஜெகதீசன் களமிறங்கினார். அதிலும் எந்த ஒரு குறிப்பிடும் வகையில் ஒரு ஆட்டத்தை அவர் பதிவு செய்யவில்லை. அதனை தொடர்ந்து 2024-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் போது கொல்கத்தா அணி இவரை அணியிலிருந்து விடுவித்தனர். மேலும், அந்த ஏலத்தில் எந்த ஒரு அணியும் அவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜெகதீசன் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸில் ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனையாளராக செயலாற்றி வருகிறார். நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது இவர் சென்னை அணிக்காக ஒரு போட்டியில் விளையாடும் பொழுது தோனியுடனான ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அவர் பேசுகையில், “நான் சென்னை அணியில் இருந்த போது பெங்களுரு அணியுடனான ஒரு போட்டியில் பந்து வீசி கொண்டிருந்தோம் அந்த போட்டியில் விராட் கோலி மிகச்சிறப்பாக விளையாடி கொண்டிருந்தார்.
நான் அவரது ஆட்டத்தை மெய் சிலிர்த்து பார்த்து கொண்டிருந்தேன், அதனால் களத்தில் இருக்கும் தோனியை நான் பார்க்கவில்லை கேப்டன் தோனியை பொறுத்த வரை ஒவ்வொரு பந்து வீசிய பிறகும் அவரை பார்க்க வேண்டும் வேறு எங்கும் வேடிக்கை பார்த்தால் அவருக்கு பிடிக்காது. நான் அன்றைய போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் செய்வதை வியந்து பார்த்து கொண்டிருந்ததால் தோனியை பார்க்க முடியவில்லை.
இதனால் தோனி என்னிடம் ‘போட்டியில் கவனத்துடன் ஈடுபாடுவாய் என்றால் களத்தில் இரு இல்லை என்றால் வெளியே போய் உட்காந்து கொள்’ என்று கூறினார். இப்படி சக வீரர்களையும் போட்டியில் இருந்து கவனம் போய்விட கூடாது என்பதில் அவர் கவனம் செலுத்துவதால் தான் அவர் தலைசிறந்த கேப்டனாக இருக்கிறார்”, என்று நாராயண் ஜெகதீசன் நேற்றைய போட்டியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையின் போது கூறி இருந்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…