டி20I: இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாகாணங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8-வது போட்டியாக ‘ஏ’- பிரிவில் (Group-A) அணிகளான இந்தியா அணியும், அயர்லாந்து அணியும் இன்று நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8 மணிக்கு மோதுகிறது.
இந்த தொடரில் இந்த 2 அணிகளுக்கும் இதுவே முதல் போட்டியாகும். ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணி விளையாட போகும் முதல் டி20 போட்டி என்பதால் இந்த போட்டிக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு என்பது கிடைத்துள்ளது.
டி20 போட்டிகளில் பலமாக இருக்கும் இந்திய அணியை இன்றைய போட்டியில் அயர்லாந்து அணி எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். இந்த இரு அணிகளும் இது வரை 7 டி2ஓ உலகக்கோப்பை போட்டியில் சந்தித்துள்ளனர், அதில் 7 முறையும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
கடந்த வங்காளதேசத்துடனான பயிற்சி போட்டியில் இந்திய அணியில் நன்றாக விளையாடிய முதல் 11 வீரர்களே இந்த லீக் சுற்றின் முதல் போட்டியிலும் தேர்வாவர்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்படி இன்றைய போட்டியில் இந்திய அணியில் எதிர்ப்பார்க்கப்படும் 11 வீரர்களை கீழே பார்க்கலாம்.
இந்தியா அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), சஞ்சு சாம்சன், விராட் கோலி , சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
அயர்லாந்து அணி :
பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), லோர்கன் டக்கர் (விகேட்கீப்பர்), ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, ராஸ் அடேர், பேரி மெக்கார்த்தி, மார்க் அடேர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…