மஞ்சள் அலர்ட்.. இந்தியா vs அயர்லாந்து முதல் டி20 போட்டி நடைபெறுமா.? வானிலை நிலவரம் இதோ…

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்திற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இன்று முதல் இந்த போட்டி துவங்க உள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, அயர்லாந்திற்கு இந்திய கிரிக்கெட் அணி சென்று விளையாட உள்ளது. ஆனால் இதில் வெஸ்ட் இண்டீஸ் உடன் விளையாடிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் வேகபந்து வீச்சாளரான பும்ரா 10 மாதம் கழித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இளம் கிரிக்கெட் அணியை வழிநடத்த உள்ளார். அணியின் கேப்டனாக இளம் கிரிக்கெட் அணியை வழி நடத்துகிறார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் அயர்லாந்திற்கு எதிரான அணியில் இடம்பெற்றுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு ( இந்திய நேரப்படி இரவு 7.30 மணி) தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மைதானம் அமைந்துள்ள டப்ளினில் வானிலை அறிக்கையின் படி, 67% மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், அங்கு மஞ்சள் நிற எச்சரிக்கை ஏற்கனவே விடப்பட்டுள்ளது எனவும் இதனால் அங்கு போட்டி குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இன்றைய மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு எதுவாக உள்ளது என்றும், சராசரியாக இந்த மைதானத்தில் 151 ரன்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அயர்லாந்திற்கு எதிராக 5 சர்வதேச டி20 விளையாடிய இந்திய அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.