இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின்போது ஸ்ரேயாஸ் ஐயர்க்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளை நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றிவிடும். இதனால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்புகள், ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்திய அணியில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு தோள்பட்டையில்ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பதவி வகிக்கிறார். தற்பொழுது அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்றால், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை யார் ஏற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரிஷப் பந்த் கேப்டன் பொறுப்பை ஏற்கலாம் என கூறப்படுகிறது. இல்லையெனில், ஷிகர் தவான் அல்லது ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரில் ஒருவர் கேப்டன் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்க அதிகளவில் வாய்ப்புள்ளது. மேலும், குல்தீப் யாதவ்க்கு பதில் சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9 ஓவர்கள் வீசிய குலதீப், 60 ரன்களுக்கு மேல் வழங்கியது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…