அடுத்த மாதம் மும்பையில் பெண்கள் பிரீமியர் லீக்கின் ஏலம்..?

Published by
murugan

பெண்கள் பிரீமியர் லீக்கின் ஏலம் டிசம்பர் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ இதுவரை அறிவிக்கவில்லை. மேலும், கடந்த ஏலத்திற்கு பிறகு மீதமுள்ள ரூ. 1.5 கோடியை ஐந்து அணிகளுக்கும் வழங்கப்படும். சமீபத்தில், அணிகள் தங்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன. அதில் ஐந்து அணிகள் 60 வீரர்களைத் தக்கவைத்துகொண்டனர். 29 வீரர்களை விடுவித்துள்ளன. தக்கவைக்கப்பட்ட 60 வீரர்களில் 21 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்.

டிசம்பர் 9 ஆம் தேதி மும்பையில் ஏலம் நடைபெற்றால் ஒன்பது வெளிநாடு வீரர்கள் உட்பட 30 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படள்ளனர். பெண்கள் பிரீமியர் லீக் தொடக்க சீசனில், ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.12 கோடி வழங்கப்பட்டது. சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய இரு அணிகள் மட்டுமே இந்தப் பணத்தை முழுமையாகப் பயன்படுத்தினர். மற்ற மூன்று அணிகளுக்கு மீதம் வைத்து இருந்தனர். அதன்படி, குஜராத் ஜெயன்ட்ஸிடம் ரூ. 5 லட்சமும், டெல்லி கேப்பிடல்ஸிடம் ரூ. 35 லட்சமும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் ரூ. 10 லட்சமும் இருந்தது.

தொடக்க சீசனில் கடைசி இடத்தைப் பிடித்த குஜராத் ஜெயண்ட்ஸ் தங்கள் அணியில்  பாதி வீரர்களை விடுவித்ததால் அதிகபட்சமாக ரூ. 5.95 கோடி வைத்துள்ளனர். அவற்றை வைத்து 10 வீரர்களை வாங்க வேண்டும். இதில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் உள்ளன. பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற்ற யுபி வாரியர்ஸ், ரூ. 4 கோடியை வைத்துள்ளனர். அதை அவர்கள் வெளிநாட்டு வீரர் உட்பட ஐந்து வீரர்களை வாங்க  பயன்படுத்தலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), ஸ்மிருதி மந்தனா, சோஃபி டிவைன் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோரைக் கொண்ட நட்சத்திரப் அணிகளாக இருந்தும் கடந்த ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியது. இந்த அணி மூன்று வெளிநாட்டு வீரர்கள் உட்பட ஏழு வீரர்களை வாங்க ரூ. 3.35 கோடி உள்ளது. இரண்டாம் இடத்தைப் பிடித்த டெல்லி அணி வெளிநாடுகளில் ஒரு வெளிநாட்டு வீரர்கள் உட்பட மூன்று இடங்களை நிரப்ப ரூ.2.25 கோடியை வைத்துள்ளது.

நடப்பு சாம்பியன் அணியான மும்பை அணி 2.1 கோடியை வைத்து ஐந்து வீரர்களை  வேண்டும். இதில் ஒரு  வெளிநாடு வீரர் உள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஏலத்தின் போது ஸ்மிருதி மந்தனா ஆர்சிபி அணி ரூ. 3.4 கோடிக்கும், குஜராத் ஜெயண்ட்ஸ் ஆஷ்லே கார்ட்னர் ரூ. 3.2 கோடிக்கும் , மும்பை அணி  நாட் ஸ்கிவர்பிரண்ட்டை  ரூ. 3.2 கோடிக்கும் எடுத்தனர்.

இந்த ஆண்டும் ஐந்து அணிகள் பங்கேற்கும் பெண்கள் பிரீமியர் லீக்கில் போட்டியின் வடிவம் முதல் சீசனைப் போலவே இருக்கும். ரவுண்ட் ராபின் முறையில் ஐந்து அணிகளும் தலா 2 முறை மோதும். அதன் பிறகு டாப்-3 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். முதல் இடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும், அதே நேரத்தில் 2-ம் மற்றும் 3-ம் இடத்தில் உள்ள அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும்.

Published by
murugan

Recent Posts

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

3 minutes ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

21 minutes ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

3 hours ago

பிரதமர் மோடி போராளி…பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பார்” நடிகர் ரஜினிகாந்த்!

மும்பை :  கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…

3 hours ago

பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனு! உச்சநீதிமன்றம் காட்டம்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…

4 hours ago

ப்ளீஸ் பாலோவ் பண்ணாதீங்க…விஜய் வைத்த வேண்டுகோளை மீறும் த.வெ.க தொண்டர்கள்!

மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…

4 hours ago