மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று இங்கிலாந்து, இந்தியா மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் இறங்கிய இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சொதப்பிய இந்தியா:
அணியின் தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா (35 ரன்கள்) குவித்தார். இரண்டாவது சிறந்த தனிநபர் ஸ்கோராக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிச்சா கோஷ் ரன் பார்க்கப்படுகிறது. இவர் 33 ரன்கள் எடுத்தார். இதைத் தவிர வேறு எந்த வீராங்கனையும் 20 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. இங்கிலாந்து தரப்பில் சார்லட் டீன் 4, அன்யா ஷ்ருப்சோலி 2 விக்கெட்டை பறித்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் இந்திய விக்கெட்டை பறித்தனர்.
135 ரன்கள் இலக்கு:
135 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டாமி பியூமண்ட், டேனியல் வியாட் இருவரும் தலா 1 ரன் எடுத்து வெளியேறினர். பின்னர் இறங்கிய ஹீதர் நைட், நடாலி ஸ்கிவர் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய நடாலி ஸ்கிவர் 45 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் அதிரடியாக விளையாடிய கேப்டன் அரைசதம் விளாசி 53* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.
இங்கிலாந்து வெற்றி:
இறுதியாக இங்கிலாந்து அணி 31.2 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 136 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 4 போட்டிகள் விளையாடியிருக்கும் இந்தியாவுக்கு இது இரண்டாவது தோல்வி.
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…