உலகம் தரம்வாய்ந்த ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் என்று கொல்கத்தா அணியின் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 13வது சீசன் வருகின்ற சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளது. மேலும் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை காண அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் மேலும் கொல்கத்தா அணியின் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மிகவும் அதிரடியாக விளையாடி 512 ரன்கள் விளாசினார். மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மட்டும் கிட்டத்தட்ட 204.81 ஆக இருந்தது.
பந்து வீச்சிலும் 13 விக்கெட்டுகளை எடுத்து அனைத்து ரசிகர்களுக்கு மனதில் இடம் பிடித்தார், மேலும் இந்நிலையில் இந்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் அவர் மீது எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகி உள்ளது என்றே கூறலாம்.
இந்த நிலையில் அவரின் ஆட்டத்தை காண பல கிரிக்கெட் வீரர்களும் உள்ளதாக அவரை புகழ்ந்து கூறிவருகின்றனர். அந்த வகையில் கொல்கத்தா அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஆண்ட்ரே ரஸ்ஸல் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.
அதில் ரிங்கு சிங் கூறியது, நான் ஆண்ட்ரே ரஸ்ஸளுடன் அதிகம் பேசியதில்லை, ஆனால் கடந்த 2018ம் ஆண்டு அவருடைய பிறந்த நாளை நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து கொண்டாடினோம், அப்போது இருந்து நண்பர்களாக மாறிவிட்டோம் என்று கூறியுள்ளார்.
மேலும் அதனை தொடர்ந்து பேசிய ரிங்கு சிங், உலகம் தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் தான் அவரை போன்று சிக்ஸர் யாராலும் அடிக்கமுடியாது என்று கூறியுள்ளார், அவருடன் எந்த ஒரு வீரரையும் குறிப்பிடமுடியாது என்றும் கூறியுள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…