#WorldTestChampionship: பரிசுப் பட்டியலை வெளியிட்டது ஐசிசி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெல்லும் அணிகளுக்கு பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை 4 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தது ஐசிசி. இது டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றும் வகையில் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு 2 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் சதவீதத்தின் அடிப்படையில், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகின்றன.
இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படுகிறது. ஒருவேளை போட்டி டிராவில் முடிந்தால், இரண்டு அணிகளுக்கும் பட்டம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதிப்பெற்றன. இதில், நியூசிலாந்து அணி வென்று முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், தற்போது இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி இறுதிப் போட்டிக்கு இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் தகுதி பெற்றுள்ளன. அதன்படி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் 7ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஐசிசி கோப்பை எதையும் இந்திய அணி பெறாத நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை இறுதிப் போட்டி வரைக்கும் சென்ற, இந்திய அணி இம்முறை கட்டாயம் கோப்பையை வெல்லும் என்ற முனைப்புடன் உள்ளது.
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெல்லும் அணியிலிருந்து, இதுவரை வெளியேறிய அணிகள் வரை ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.13.20 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.60 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மூன்றாவது இடத்துக்கு 3.6 கோடி, நான்காவது இடம் 2.8 கோடி, ஐந்தாவது இடம் 1.6 கோடி மற்றும் 6வது இடத்தில இருந்து 9 வரையிலான இடத்திற்கு தலா 82 லட்சம் வழங்கப்படுகிறது.
Prize pot for the ICC World Test Championship 2021-23 cycle revealed ????
Details ????https://t.co/ZWN8jrF6LP
— ICC (@ICC) May 26, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025