பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 4 விக்கெட் இழப்புக்கு, 216 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இன்று நடைபெறும் 22ஆவது ஐபிஎல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகிறது. மும்பையில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி பேட்டிங் செய்தது.
இந்த நிலையில், தொடக்கத்தில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து விளையாடிய உத்தப்பா, சிவம் துபே இருவரும் அதிரடியாக விளையாடி, இருவரும் அரைசதம் அடித்தனர். உத்தப்பா 9 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன், 8 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல், துபே 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்தார்.
பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 4 விக்கெட் இழப்புக்கு, 216 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களில் தொடர் தோல்வியை சந்தித்தது. பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோற்ற நிலையில், அதனை தொடர்ந்து, கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை அணிகளுடன் விளையாடிய ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி, பெங்களூரை வீழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…