கோடைகால கொண்டாட்டமாக 13-வது ஐபிஎல் தொடர் வருகின்ற 29-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ,துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா , ஹர்பஜன்சிங் ,அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு எந்தவித சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை இதனால் தோனியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பயிற்சியை காண ஏராளமான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு குவிந்தனர்.
அப்போது அவர் மைதானத்தில் உள்ளே சென்றதும் தோனி… தோனி… தல.. தல.. என கோஷமிட்டனர். இதற்கிடையில் ஒரு ரசிகர் திடீரென பாதுகாப்பையும் மீறி மைதானத்திற்குள் நுழைந்து தோனியை நோக்கி ஓடினார்.
பின்னர் தோனியின் காலில் விழுந்து வணங்கினார்.பின்னர் அந்த ரசிகரை பாதுகாப்பு ஊழியர்கள் எச்சரித்து வெளியே அனுப்பினர். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்புச் சாம்பியனான மும்பை அணியும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் முதல் போட்டி ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறும். இந்தப் போட்டியில் சென்னை அணியும் , ராஜஸ்தான் அணியும்மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…