IndvsEng : டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!

INDvsENG

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி முதல் போட்டிஇன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள் 

இந்தியா 

ரோஹித் சர்மா(கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

இங்கிலாந்து 

விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!

ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), பென் ஃபோக்ஸ்(விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜாக் லீச்

இந்தியா vs இங்கிலாந்து நேருக்கு நேர் 

இதற்கு முன்னதாக இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் 35 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில்  11 போட்டிகளில் இந்திய அணியும், 19 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றுள்ளது. 5 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளது.

போட்டியை எதில் பார்க்கலாம் ?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டிகளை ஸ்போர்ட்ஸ்18 நெட்வொர்க் சேனலில் பார்க்கலாம். அதைப்போல, ஜியோசினிமா ஆப் மற்றும் இணையதளம் ஆகியவற்றிலும் பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்