முதல் டெஸ்ட் : பந்து வீச்சில் கலக்கிய இந்திய வீரர்கள்..! 150 ரன்னில் பங்களாதேஷ் ஆல் அவுட் ..!

Published by
murugan

இந்தியாவில் சுற்று பயணம் செய்து பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இன்று முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாட்மேன் , இம்ருல் கயஸ் இருவரும் களமிறங்கினர்.
Image
ஆட்டம் தொடக்கத்திலே இருவரும் 6 ரன்னுடன் வெளியேறினர். பின்னர் இறங்கிய முகமது மிதுன் நிலைத்து நிற்காமல் 13 ரன்களுடன் வெளியேறினர். இதனால் பங்களாதேஷ் அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது.இதை தொடர்ந்து கேப்டன் மோமினுல் ஹக் , முஷ்பிகுர் ரஹீம் இருவரும் இனைந்து அணியின் எண்ணிக்கையை உயரத்தினர்.
நிதானமாக விளையாடி வந்த முஷ்பிகுர் ரஹீம் அரைசதம் அடிக்காமல் 43 ரன்களுடனும் , கேப்டன் மோமினுல் ஹக் 37 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற பங்களாதேஷ் அணி 58.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டையும் , முகமது ஷமி  3 விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வால் ,ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
 

Published by
murugan

Recent Posts

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

19 minutes ago

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…

33 minutes ago

பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!

நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…

49 minutes ago

”ரயில்வே கிராஸிங்கில் சிசிடிவி கட்டாயம்” – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ரயில்வே துறை.!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில்…

1 hour ago

இந்தியா – இங்கிலாந்து இடையே 3வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்.!

லண்டன் : ஷுப்மான் கில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

1 hour ago

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

11 hours ago