Neeraj Chopra [file image]
நீரஜ் சோப்ரா: நடப்பு ஆண்டின் பாவோ நர்மி விளையாட்டுப் போட்டியானது துர்குவில் உள்ள பாவோ நர்மி ஸ்டேடியத்தில் இன்று (ஜூன்-18)செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா தற்போது தங்கம் வென்றுள்ளார்.
இந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா 85.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தியிருக்கிறார். நடைபெற்ற இந்த ஈட்டி எறிதல் போட்டியின் முதல் சுற்றில் நீரஜ் 83.62 மீட்டர் தூரம் எறிந்து முன்னணியில் இருந்தார். ஆனால், பின்லாந்து நாட்டை சேர்ந்த ஹெலாண்டர் 83.96 மீட்டர் தூரம் எறிந்து நீரஜை விட தூரம் எறிந்து முன்னிலை பெற்றார்.
அதன் பிறகு, நடைபெற்ற மூன்றாவது சுற்றில் தான் நீரஜ் 85.97 மீட்டர் தூரம் அசத்தலாக ஈட்டியை எறிந்து மீண்டும் முன்னிலை பெற்றார். இதன் மூலம் தங்கப்பதக்கத்தை வென்று இந்திய நாட்டிற்கு பெருமையை தேடி தந்துள்ளார். நீரஜ் 5-வது முறையாக இந்த பாவோ நர்மி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
அதே நேரம், கடந்த 2022-ம் ஆண்டின் பாவோ நர்மி விளையாட்டுப் போட்டியில் பின்லாந்தை சேர்ந்த ஒலிவர் ஹெலாண்டர் நீரஜை முந்தி தங்கப் பதக்கம் வென்றார் குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…