அடுத்தாண்டு முதல் முதல் முறையாக 100 பந்து கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. முன்பு 50 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் 20 ஓவர் போட்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் டி20 போட்டி விட குறைவான பந்துகள் கொண்ட 100 பால் கொண்ட கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அடுத்த வருடம் ஜூலை மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த தொடரில் விளையாட அணி வீரர்களை தேர்வு செய்யப்பட்டு வருகின்றது. பிரபல கிரிக்கெட் வீரர்களான ஸ்மித் , வார்னர் ஆகிய இருவருக்கும் 125,000 பவுண்டுகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதாவது இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 15 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் கிறிஸ் கெயில் , மலிங்கா , ரபாடா ஆகியோருக்கும் இதே விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஷாகிப் அல் ஹசன் , வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் ஆகியோருக்கு ஒரு லட்சம் பவுண்டுகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டிகளுக்கான ஏலம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…