இந்திய அணி டிக்ளேர் அறிவிப்பு..!இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய பங்களாதேஷ் ..!

முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பங்களாதேஷ் அணி 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
பின்னர் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் 6 ரன் எடுத்து வெளியேறினார். முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 86 ரன்கள் எடுத்து இருந்தது. களத்தில் புஜாரா 43 , மாயங்க் அகர்வால் 37 ரன்களுடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது.
சிறப்பாக விளையாடி வந்த புஜாரா அரைசதம் அடித்து 54 ரன்னில் வெளியேறினர்.பின்னர் இறங்கிய கேப்டன் கோலி ரன்கள் எடுக்கலாம் வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடி வந்த மாயங்க் அகர்வால் இரட்டைசதம் அடித்து 243 ரன்கள் குவித்தார்.
இதை தொடர்ந்து இறங்கிய ரஹானே , ஜடேஜா ஆகிய இருவருமே அரைசதம் விளாசினார். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 6 விக்கெட்டை இழந்து 493 ரன்கள் எடுத்து இருந்தது.
களத்தில் ஜடேஜா 60 ,உமேஷ் யாதவ் 25 ரன்களுடன் இருந்தனர்.இந்நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் தொடக்கிய போது இந்திய அணி கேப்டன் கோலி டிக்ளேர் அறிவித்தார்.பங்களாதேஷ் அணி வீரர் அபு ஜெயத் 4 விக்கெட்டை பறித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025