பிஃபா உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று..! இந்தியா – கத்தார் அணிகள் இன்று மோதல்.!

INDQAT

உலகின் மிகப்பெரிய ஆண்கள் கால்பந்து போட்டியான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது. சுமார் 48 அணிகள் இடம்பெறும் இந்த போட்டி 16 மைதானங்களில் நடைபெறும். இதில் தற்போது இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு 36 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்த 36 அணிகளும் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு அணிகளும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ரவுண்ட்-ராபின் முறையில் நவம்பர் 13 முதல் ஜூன் 11 வரை விளையாடும். இதில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் பிஃபா உலகக் கோப்பை 2026 மூன்றாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.

லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் ஒரு கையால் சிக்ஸர் அடித்த ‘யுனிவர்ஸ் பாஸ்’..!

மீதமுள்ள 18 அணிகள் ஆறு பேர் கொண்ட மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் மீண்டும் செப்டம்பர் 2024 முதல் ஜூன் 2025 வரை விளையாடும். அந்த பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களைப் பெரும் அணி 26வது உலகக் கோப்பையில் இடம்பெரும்.

இதில் சுனில் சேத்ரி தலைமையாலான இந்திய கால்பந்து அணி, ஆசிய சாம்பியனான கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தியா அணி நவம்பர் 17ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் குவைத் அணியுடன் மோதி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய கால்பந்து அணி புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.

டி20 தொடரில் புறக்கணிக்கப்பட்ட மூத்த வீரர்கள்..! யார் யார் தெரியுமா..?

இதைத்தொடர்ந்து, இன்று புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடக்கும் இரண்டாவது குரூப் ஆட்டத்தில், உலக தரவரிசையில் 61வது இடத்தில் உள்ள கத்தாரை எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேறும். தற்போது ஏ பிரிவின் புள்ளி பட்டியலில் கத்தார் அணி முதலிடத்திலும், இந்திய அணி 2 வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்