ஆசிய விளையாட்டில் முதல் முறையாக 100 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா.!

Published by
செந்தில்குமார்

19 ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆனது கடந்த செப்டம்பர் 23ம் தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 13 வது நாளாக நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய அணியில் உள்ள 699 வீரர் மற்றும் வீராங்கனைகள் 39 விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவிற்காக தங்கம், வெள்ளி என பல பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்தவகையில், தற்போது வரை 91 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இன்னும் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருவதன் மூலம் இந்தியா 100 பதக்கங்களை வெல்வது உறுதியாகியுள்ளது.  2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்த பிரிவில் சோனம் மாலிக் வெண்கலம் வென்று இந்தியாவின் 91 வது பதக்கத்தைப் பதிவு செய்தார். 21 தங்கம், 33 வெள்ளி, 37 வெண்கலம் என வென்ற 91 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி, மீதமுள்ள போட்டிகளில் மேலும் ஒன்பது பதக்கங்களை வெல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி அணியானது 1 பதக்கத்தை உறுதி செய்துள்ளது. அதே போல, வில்வித்தையில் மூன்று போட்டிகளில் பிரவின் டியோடேல், அபிஷேக் வர்மா மற்றும் ஜோதி சுரேகா ஆகியோர் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர். இதனால் வில்வித்தையில் 3 பதக்கங்கள் உறுதியாகியுள்ளது.

கபடி போட்டியிலும் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியானது இறுதிப்போட்டிக்கு முன்னேறி, 2 பதக்கங்களை உறுதி செய்துள்ளது. பேட்மின்டனில் இந்தியாவின் ஆண்கள் இரட்டையர் பிரிவினரான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறி 1 பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

அதேபோல, கிரிக்கெட் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 1 பதக்கத்தையும், பிரிட்ஜ் போட்டியிலும் இந்திய ஆண்கள் அணி ஒரு பதக்கத்தையும் உறுதி செய்துள்ளனர். இவ்வாறு மொத்தமாக 9 பதக்கங்களை உறுதி செய்த நிலையில், இந்தியா 19 ஆசிய விளையாட்டு போட்டியில் 100 பதக்கங்களை வெல்வது உறுதியாகியுள்ளது.

முன்னதாக 2018ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றது. அந்த எண்ணிக்கையை, தற்போதைய ஆசிய விளையாட்டுப் போட்டியில் கடந்த அக்டோபர் 4ம் தேதி 71 பதக்கங்களை எடுத்த நிலையில், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் எடுத்த 70 பதக்கங்கள் என்ற எண்ணிக்கையை கடந்து சென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – ஆர்சிபி.!

பெங்களூரு : ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு…

6 minutes ago

நாளை மறுநாள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : நாளை மறுநாள் ஜூன் 7ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று…

17 minutes ago

”நட்பு ரீதியாக ராமதாஸை சந்தித்தேன், அன்புமணி வந்ததே எனக்கு தெரியாது” – ஆடிட்டர் குருமூர்த்தி.!

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸை, அன்புமணி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு…

25 minutes ago

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.., அணியை அறிவித்தது இங்கிலாந்து.!

டெல்லி: ஐபிஎல் தொடர் முடிந்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக சுப்மான் கில்…

1 hour ago

#FactCheck : நாளை பொதுவிடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பா? விளக்கம் கொடுத்த அரசு!

சென்னை : அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது வதந்தியான செய்திகள் பரவுகிறது என்றாலே அதனை சரிபார்த்து உண்மையா இல்லையா என அரசின்…

3 hours ago

“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி அவர் தான்”..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை…

4 hours ago