நாளை மறுநாள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 7ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை : நாளை மறுநாள் ஜூன் 7ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக இந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் திமுக எம்.பி, எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். இந்த கூட்டத்தில், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, கட்சியை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கையை வெற்றிகரமாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.
சமீபத்தில், மதுரையில் ஜூன் 1ம் தேதி அன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்து, அதில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும், முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதியை செம்மொழி நாளாக கொண்டாடுவது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தின் தொடர்ச்சியாக, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் அடுத்தகட்ட திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் அமைகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!
June 6, 2025
அனைத்து விதமான கிரிக்கெட்டிற்கும் குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
June 6, 2025