ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் 10 அணிகள் இடையிலான 6-வது சீசன் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் 4-வது நிமிடத்தில் சென்னை வீரர் ஸ்கெம்ப்ரி கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் 15-வது நிமிடத்தில் கேரளா கேப்டன் ஒக்பீச்சே ‘பிரீகிக்’ பதிலடி கொடுக்குமாறு கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார்.
மேலும் சில வினாடி பந்தை கடத்திச் சென்ற சென்னை வீரர் வல்ஸ்கிஸ் மற்றோரு கோல் அடித்தார். அது கோல் இல்லை என்று நடுவர் அறிவித்தார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான சென்னை வீரர்கள், அணியின் பயிற்சியாளர், ஆப்-சைடு நடுவரிடம் முற்றுகையிட்டனர். ஆனால் எதையும் நடுவர் கண்டுகொள்ளவில்லை ஆட்டம் தொடர்ந்து நடந்தது.
இந்நிலையில், 30-வது நிமிடத்தில் லாவகமாக கோல் அடித்து பதிலடி கொடுத்தார். உள்ளூர் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து 40-வது நிமிடத்தில் சென்னை வீரர் வல்ஸ்கிஸ் மேலும் ஒரு கோலை போட்டு, கேரளாவை நிலைகுலையச் செய்தார். இதனால் முதல்பாதியில் 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பத்தியில் இரு அணிகளும் கோல் போடாததால், முடிவில் சென்னையின் எப்.சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை தோற்கடித்தது. 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி, 9 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…