அரையிறுதி போட்டியில் ஜெர்மனியிடம் நடப்பு சாம்பியனான இந்தியா தோல்வியடைந்தது.
12-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை சந்தித்தது. கால்இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது.
இந்நிலையில், அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா அரையிறுதியில் ஆறு முறை பட்டம் வென்ற ஜெர்மனிக்கு எதிராக 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடைசி நிமிடத்தில் பாபி ஒரு கோலை அடித்தார். ஆனால், அது ஆறுதல் கோலாகவே அமைந்தது.
முதல் கால்பகுதி முடிந்தபோது 1-0 என ஜெர்மனி முன்னிலையில் இருந்தது. ஜெர்மனிக்கு இரண்டு பெனால்டி வாய்ப்பு கிடைத்ததில் ஒன்றை கோலாக மாற்றினார். ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் ஜெர்மனி ஆறு முறை சாம்பியனாகவும், இந்தியா நடப்பு சாம்பியனாகவும் உள்ளது.
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…