இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தமிழ் பாடல் ஒன்றுக்கு நடனமாடி டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக மாறியுள்ளது.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது. மேலும், வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில், திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தமிழ் பாடல் ஒன்றுக்கு நடனமாடி டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக மாறியுள்ளது. அந்த வீடியோவில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுன், மதுபாலா ஆடிய இருந்து ‘ஒட்டகத்த கட்டிக்கோ’ என்ற பாடலுக்கு கெவின் பீட்டர்சன் நடனமாடியுள்ளார். இந்த பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இதற்குமுன் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மன் டேவிட் வார்னர், கொரோனா ஊரடங்கை குடும்பத்துடன் டிக்டாக் செய்து சந்தோசமாக இருந்து வருகிறார். இவர், தெலுங்கு பாடலான ‘புட்டபொம்மா’ பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. இதையடுத்து, இளையராஜாவின் ‘இஞ்சி இடுப்பழகி” பாடலின் இசைக்கு குடும்பத்துடன் டிக்டாக் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது, இந்த நிலையில், தற்போது கெவின் பீட்டர்சன் ‘ஒட்டகத்த கட்டிக்கோ’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…