இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியும், போட்டியை வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணியும் கடும் சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.
அதை தொடர்ந்து சாதனை நாயகனான இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் மிகப்பெரிய சாதனை மைல்கல்லை ஒன்றை எட்ட உள்ளார். அது என்னவென்றால், இதுவரை 240 ஒருநாள் போட்டிகள், 75 டி20 போட்டிகள் மற்றும் 84 டெஸ்ட் போட்டிகளுடன் 399 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் இன்று கோலி பங்கேற்கவுள்ள இந்த போட்டியோடு தனது 400-வது சர்வதேச போட்டியை நிறைவு செய்கிறார். இதுவரை ரன் குவிப்பு மற்றும் தனது அதிரடியான பேட்டிங் மூலம் சாதனை செய்து வந்த கோலி தற்போது போட்டிகளின் எண்ணிக்கையிலும் சாதனை படைத்திருப்பது ரசிகர்களை கவரும் வண்ணத்தில் உள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…