kl rahul [File Image]
தென்னாப்பரிகாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பரிகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் தற்போது முடிந்துள்ளது.
அதன்படி, இந்திய அணி 67.4 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில், இந்திய வீரர் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்த இந்திய அணியை தன்னுடைய பேட்டிங்கால் தாங்கி பிடித்து கே.எல்.ராகுல் 101 ரன்கள் அடித்தார். இவர் அடித்த இந்த ரன்கள் தான் இந்திய அணிக்கு நல்ல ரன்களை சேர்த்தது. அது மட்டுமின்றி இந்த போட்டியில் சதம் விளாசி கே.எல்.ராகுல் சாதனையையும் படைத்துள்ளார்.
சதம் விளாசிய கே.எல்.ராகுல்.. 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா..!
அது என்ன சாதனை என்றால் செஞ்சுரியனில் அதிகம் சதம் விளாசிய வீரர் என்ற சாதனை தான். இந்த சென்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் கே.எல் ராகுலுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய வீரர் விராட் கோலி, ஆஸ்ரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் ஒரு சதம் அடித்து இருந்தார்கள்.
தற்போது அவர்களை மிஞ்சும் அளவிற்கு கே.எல்.ராகுல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இந்திய அணியின் இன்னிங்ஸ் போது சதம் விளாசி சென்சூரியனில் அதிகம் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சதம் விளாசி சாதனை படைத்த கே.எல்.ராகுலுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…