பத்ம பூஷன்,பத்ம ஸ்ரீ,பத்ம விபூஷ்ண் விருதுகள் அறிவிப்பு..

- மத்திய அரசின் பத்ம விபூஷ்ண் மற்றும் பத்தம்ஸ்ரீ,பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1180 பேருக்கு பத்மஸ்ரீ, 7 பேருக்கு பத்ம விபூஷ்ண் மற்றும் 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டிற்கான மத்திய அரசின் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் படி மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் வெளித்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்னான்ட்ஸ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் பிரிவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் டிவிஎஸ் வேணு சீனிவாசனுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர், தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகரான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் புதுச்சேரியில் சேர்ந்த மனோஜ் தாஸ்க்கு பத்ம பூஷன் உள்பட 118 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025