65 மில்லியன் டாலர்கள் பிராண்ட் மதிப்புடன் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியின் அணியின் ஐபிஎல் 2018 தொடரின் மதிப்பு மிக்க பிராண்டாக எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஐபிஎல் அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமிருந்து மதிப்பு மிக்க பிராண்ட் என்ற தகுதியை பெற்றது. இந்த பிராண்ட் வேல்யூ ஆய்வை நடத்தியது பிராண்ட் ஃபைனான்ஸ் என்ற முன்னணி பிராண்ட் மதிப்பு ஆய்வு நிறுவனமாகும். தோனி தலைமை சிஎஸ்கே அணி 65 மில்லியன் அமெரிக்க […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஒருநாள் அணியில் தன்னைத் தேர்வு செய்யாதது தனக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது என்று உஸ்மான் கவாஜா வருந்தியுள்ளார். இது குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்காக உஸ்மான் கவாஜா கூறியதாவது: உள்ளபடியே கூற வேண்டுமெனில் நான் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளேன். ஜஸ்டின் லாங்கரிடமும் பேசினேன், அணித்தேர்வுக்குழுவினரிடத்திலும் பேசினேன். ஆனால் சில விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய ரன்களைக் […]
கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஐசிசி சர்வதேச ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் 6-வது இடத்துக்குச் சரிந்து, பாகிஸ்தானுக்கும் கீழாகச் சென்றுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி முதல் இரு போட்டிகளிலும் மோசமான தோல்வியை அடைந்த காரணத்தால், தரவரிசைப்பட்டியலில் பாதாளத்துக்குச் சென்றது. 6-ம் இடம் என்பது ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பாதாளம் என்றேதான் கூற முடியும். இதற்கு முன் கடைசியாக தரவரிசைப்பட்டியலில் 6-ம் இடத்தில் கடந்த 1984ம் ஆண்டு ஆஸ்திரேலியா இருந்தது […]
நாளுக்குநாள் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆட்டம் மோசமடைந்து வருகிறது. இதையடுத்து அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை ஆலோசகர்களாக நியமிக்கலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. முரளிதரன், ஜெயவர்தனே, குமார் சங்கக்காரா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு கமிட்டி அமைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணி தேர்வுக்குழு முதலில் மகேலா ஜெயவர்தனேவை அணுகியது. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து முத்தையா முரளிதரனை அணுகியது. ஆனால் இதற்கு ஒத்துழைப்பு தர அவரும் மறுத்துவிட்டார். தொடர்ந்து தோல்விகளைச் […]
நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா ஒரே நாளில் கிரிக்கெட், ரக்பி, டென்னிஸ், கால்பந்து ஆகிய நான்கு வகை விளையாட்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. கடந்த ஜூன் 16-ம் தேதி உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடந்த போட்டியில், ‘சி’ பிரிவில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியா அணி, பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து அதே நாளன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி […]
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஈடு இணை இல்லா அற்புதம் நீ” என்று தந்தையர் தினத்தன்று தன்னுடைய பாசத்தை தமிழில் கொட்டி தீர்த்துள்ளார் . சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தன்னுடைய கருத்துகளை தமிழில் பதிவிட்டு தமிழர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர் ஹர்பஜன் சிங். தமிழ் மீது அலாதி பிரியும் கொண்ட அவரின் ட்விட்டுகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள ட்விட் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தையை […]
கடந்த 14-ந்தேதி இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இரண்டே நாட்களில் முடிந்த இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா தவான் (107), முரளி விஜய் (105) ஆகியோரின் சதத்தால் இந்தியா 474 ரன்கள் குவித்தது. டி20 போட்டியில் […]
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப், பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமராவார் என்று தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-,இ- இன்சாப் கட்சி தலைவரான இம்ரான்கான் வெற்றி பெறுவார். எனவே இவரது கட்சியில் நிறைய பேர் சேர்ந்துள்ளனர். தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்ற பின் மேலும் பலர் இணைவார்கள். ஒருவேளை தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் எனது […]
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் மீது பந்தை சேதப்படுத்தியதாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இதையடுத்து, பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சந்திமாலுக்கு தடைவிதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கிந்தியத்தீவுகள் சென்றுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் வென்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்து வருகிறது. 2-வது ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 123 […]
இங்கிலாந்தின் கார்டிப்பில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஜேஸன் ராயின் முத்தாய்ப்பான சதம், பட்லரின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால், 38 ரன்களில் வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி. சதம் அடித்து அசத்திய ஜேஸன் ராய் ஆட்டநாயகராக தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் பொறுப்பேற்றபின் அந்த அணி சந்திக்கும் 2-வது தோல்வியாகும். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. வரும் செவ்வாய்கிழமை […]
இந்திய அணி கேப்டன் விராட் கோலி காரில் சென்று கொண்டு இருக்கும் போது சாலையில் குப்பையை வீசியவரை தனது மனைவி அனுஷ்கா சர்மா கோபமாக கேள்விக் கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆடி காரில் சென்ற ஒருவர் பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசி சென்றிருக்கிறார். அதனை பார்த்த விராட் கோலியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா, “ஏன் […]
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில் , வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரிபீயன் பிரிமீயர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. இதனால் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் கிரிக்கெட் ஆட்டத்திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கிளப், லீக் […]
இந்திய கிரிக்கெட் அணி, ஓவ்வொரு தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவும் வீரர்களுக்கு யோ-யோ சோதனை என்ற உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அதில் வீரர்கள் 16.3 என்ற மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற முடியும். இந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டோனி, ரெய்னா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் […]
இந்திய அணி,இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி மிகக்குறைந்த பந்துக்கள் வீசி மாபெரும் வெற்றிபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்த டெஸ்ட் போட்டி முதலிடத்தை பிடித்துள்ளது. குறைந்த பந்துக்கள் வீசி இந்திய அணி வெற்றிபெற்ற மேலும் சில போட்டிகளின் விவரங்கள் இதோ 399 பந்துக்கள், இந்தியா vs ஆப்கானிஸ்தான், பெங்களூரு, 2018* 554 பந்துக்கள், […]
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா தொடக்க விக்கெட்டுக்களை வீழ்த்த, அதன்பின் அஸ்வின் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுக்களை அள்ள ஆரம்பித்தார். அவர் ஹஸ்மதுல்லா ஷாஹிதி, கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்ஸ் ஆகியோரை வீழ்த்தினார். இந்த டெஸ்டிற்கு முன் […]
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் சேர்த்திருந்தது. இன்று 2-வதுநாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 104.5 ஓவரில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் […]
ரஷியாவில் 21-வது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக ஸ்பெயினும் கருதப்படுகிறது. அந்த அணி ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில் இன்று நள்ளிரவு பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை எதிர்கொள்கிறது. ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜூலேன் லோபெட்டேகுய் இருந்து வந்தார். இவர் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக மூன்று வருடம் பணிபுரிய சம்மதம் தெரிவித்தார். சம்மதம் தெரிவித்த அடுத்த […]