யோ-யோவை கண்டுபிடித்த டென்மார்க் விளையாட்டு, உடற்தகுதி நிபுணர் டாக்டர் ஜென்ஸ் பேங்ஸ்போ,இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தேர்வுக்கு மிகப்பெரிய தகுதியாக யோ-யோ டெஸ்ட் வைக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கமளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி, யோ-யோ டெஸ்ட் வேண்டாமென்றால் போங்கள் என்று கூற மற்றவர்களும் அணித்தேர்வுக்கு அடிப்படைத் தகுதியாக கிரிக்கெட்டில் யோ-யோவைக் கொண்டு வருவது பற்றி கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். யோ-யோவை கண்டுபிடித்த டென்மார்க் விளையாட்டு, உடற்தகுதி நிபுணர் டாக்டர் ஜென்ஸ் பேங்ஸ்போ கூறுகையில்,ஒரு குறிப்பிட்ட விளையாட்டுப் […]
ஒவ்வொரு தந்தைக்கும் அவர்களது பெண் குழந்தைகளிடம் அளவு கடந்த அன்பிருக்கும் என்று கூறலாம். அதே போல் தான் சச்சின் டெண்டுல்கருக்கும். தந்தையர் தினத்தன்று சச்சினின் மூத்த மகளான சாரா டெண்டுல்கர் இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது அப்பாவுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, அதில் பாதுகாப்பான, பாசமிகு தந்தையாகவும் விளங்கி வருவதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் சச்சின் பதிவிட்டது கிரிக்கெட் பிரியர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது. அதில், ‘அர்ஜூன் மற்றும் நீ என் வாழ்க்கையில் கிடைத்த […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த சில மாதங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றது . இந்நிலையில் தற்போது இங்கிலாந்து உடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 5-0 என்ற கணக்கில் மோசமான தோல்வி சந்தித்தது. இந்நிலையில் ஐ.சி.சி ஒரு நாள் போட்டிக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகள் குறைந்து 100 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் 5-வது இடத்திலும், வங்காளதேச அணி 7-வது இடத்திலும் புள்ளிகள் அடிப்படையில் இடம் […]
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் மோதும் போட்டி விவரங்கள் கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது: ஜூலை.3:- 1வது 20 ஓவர் 10.00 PM ஜூலை.6:- 2வது 20 ஓவர் 10.00 PM ஜூலை.8:- 3வது 20 ஓவர் 6.30 PM ஜூலை.12:- முதல் ஒருநாள் போட்டி 5.00 PM ஜூலை.14:- 2வது ஒருநாள் போட்டி 3.30. PM ஜூலை.17:- 3வது ஒருநாள் போட்டி 5.00 PM ஆகஸ்ட் 1-5: 1வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 9-13: 2வது டெஸ்ட் […]
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா சில நாட்களுக்கு முன்னதாக நடந்த யோ-யோ டெஸ்டில் பங்கேற்காதது குறித்து வெளியான தகவல்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பிடித்திருந்தார். இவர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா இடம்பிடித்தார். அதேபோல் முகமது ஷமி (ஆப்கானிஸ்தான் டெஸ்ட்) மற்றும் […]
இந்திய அணி ஐசிசி அறிவித்துள்ள முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகளை அங்கு சென்று சந்திக்கிறது. ஐசிசி இன்று வெளியிட்டுள்ள 2018-23 கிரிக்கெட் தொடர்களுக்கான எதிர்கால தொடர்கள் திட்டத்தை (எஃப்.டி.பி) வெளியிட்டது. 2 டெஸ்ட்கள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மே.இ.தீவுகளை எதிர்த்து அங்கு ஆடுகிறது இந்திய அணி. மொத்தம் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 102 சர்வதேச போட்டிகளில் 2018 முதல் 2023 வரை உள்நாட்டில் ஆடுகிறது. இந்த சவுகரியம் […]
வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது. இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி கேப்டன் சந்திமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதையடுத்து அந்த போட்டி முடிந்தபின் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையின் […]
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் முடிவடைந்த முதல் மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் கடைசி இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சாம் குர்ரான், கிரேக் ஓவர்டன் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே காயம் ஏற்பட்டு ஓய்வில் இருக்கும் பென் ஸ்டோக்ஸ், தற்போது காயம் அடைந்திருக்கும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பதிலாக இருவரும் அணியில் இடம்பிடித்துள்ளர். […]
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு இடையில் கால்பந்து தொடரில் நடைபெறும் லீக் போன்று சாம்பியன்ஷிப் தொடரை நடத்த திட்டமிட்டது. இதுகுறித்து அனைத்து கிரிக்கெட் வாரியத்திடமும் பேசியது. பெரும்பாலான கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது. இந்நிலையில் ஐசிசி வருங்கால சுற்றுப்பயண அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் 2019 முதல் 2021 வரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானம் அல்லது புள்ளிகள் அடிப்படையில் முதல் இடம்பிடிக்கும் நாட்டில் நடத்துவது என்பதில் மட்டும் […]
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் தற்போது யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பிடித்திருந்தார். இவர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா இடம்பிடித்தார். அதேபோல் முகமது ஷமி (ஆப்கானிஸ்தான் டெஸ்ட்) மற்றும் சஞ்சு சாம்சன் (இந்தியா ஏ) ஆகியோரும் வாய்ப்பை இழந்தனர். இந்நிலையில் இந்திய அணியில் உள்ள எல்லோருக்கும் யோ-யோ டெஸ்ட் நடைபெற்று […]
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான் ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 10 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்து, மிக அரிதான சாதனையை அவர் படைத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 34ஆவது இடத்தில் இருந்த தவான் 10 இடங்கள் முன்னேறி 24ஆவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தற்போது வரை இவர் பெற்ற சிறந்த தரம் இதுவாகும். இதேபோல் முரளி விஜய் 23ஆவது இடத்துக்கு […]
அச்சுறுத்தல் காரணமாக தோனியின் மனைவி சாக்ஷி துப்பாக்கி உரிமம்கோரி விண்ணப்பித்துள்ளார். இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் மனைவி பெயர் சாக்ஷி.இவருக்கு சிவா என்ற ஒரு பெண்குழந்தையும் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியின் கோப்பையை வென்றது. இந்நிலையில் தற்போது அச்சுறுத்தல் காரணமாக தோனியின் மனைவி சாக்ஷி துப்பாக்கி உரிமம்கோரி விண்ணப்பித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்களை குவித்துள்ளது. இது தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தற்போது வரை குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கேராக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இதே இங்கிலாந்து அணி 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 444 ரன்கள் எடுத்தது தான் உள்ளது. 2006-ம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி குவித்த 443 ரன்கள் தான் 3வது அதிகட்ச […]
நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 139 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 147 ரன்களும் சேர்த்தனர். 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 444 […]
ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட சஞ்சு சாம்ஸன், அம்பதி ராயுடு, வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி ஆகியோர் முன்கூட்டியே அறிவிக்கப்படாமல் நடத்தப்பட்ட யோ யோ, டெக்ஸா சோதனையால்தான் இந்திய அணியில் இடம் பெறமுடியாமல் போயுள்ள விவரம் வெளியாகியுள்ளது. இந்திய அணி நிர்வாகத்துக்கும், பிசிசிஐ அமைப்புக்கும் தகவல் தொடர்பில் ஏற்பட்ட குழப்பத்தால், இங்கிலாந்து செல்லும் இந்திய அணியைத் தேர்வு செய்தபின்தான் வீரர்களுக்கு யோ யோ, டெக்ஸா சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் யோ யோ சோதனை என்பது, வீரர்கள் பீல்டிங் செய்யும் மற்றும் […]
65 மில்லியன் டாலர்கள் பிராண்ட் மதிப்புடன் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியின் அணியின் ஐபிஎல் 2018 தொடரின் மதிப்பு மிக்க பிராண்டாக எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஐபிஎல் அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமிருந்து மதிப்பு மிக்க பிராண்ட் என்ற தகுதியை பெற்றது. இந்த பிராண்ட் வேல்யூ ஆய்வை நடத்தியது பிராண்ட் ஃபைனான்ஸ் என்ற முன்னணி பிராண்ட் மதிப்பு ஆய்வு நிறுவனமாகும். தோனி தலைமை சிஎஸ்கே அணி 65 மில்லியன் அமெரிக்க […]