INDvsWI:தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டம்.! வெளுத்து வாங்கிய ரிஷாப் , ஸ்ரேயாஸ்.!

Published by
murugan
  • ரிஷாப் பண்ட் , ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இருவரும் அரைசதம் விளாசி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு வந்தனர்.
  • இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 290 ரன்கள் அடித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றனர். முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இன்று 3 போட்டிகள் ஒருநாள் தொடர் தொடங்கியது. முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் , கே .எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.கடைசி டி 20 போட்டியில் ரன் குவித்தது போல தொடக்க வீரர்கள் அடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

Image

ஆனால் கே .எல் ராகுல் 6 பந்தில் 15 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.பின்னர் கேப்டன் கோலி களமிறங்கிய முதல் பந்திலே பவுண்டரி விளாசினார்.அடுத்த மூன்று பந்தில் கோலி போல்ட் ஆகி விக்கெட்டை இழந்தார்.இதை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் இறங்கினார். நிதானமாக விளையாடி வந்த ரோஹித் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 36 ரன்களுடன் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்திய அணியில் கடைசி டி 20 போட்டியில் ரோஹித் ,கோலி மற்றும் கே .எல் ராகுல் இவர்கள் அடித்த அதிரடி ஆட்டத்தால் தான் இந்திய அணி டி 20 தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இந்திய அணி 80 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. அப்போது இறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் , ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டு வந்தனர்.

நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர்.இவர்கள் இருவரின் கூட்டணியில்  114 ரன்கள் குவித்தனர்.சிறப்பாக விளையாடிய 70 ரன்னில் வெளியேற அடுத்த சிலநிமிடங்களில் ரிஷாப் பண்ட் 71 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

ரிஷாப் பண்ட் இதற்கு முன் விளையாடிய டி 20 தொடரில் சரியாக விளையாடாதது ரசிகர்களுக்கு பெரும் வருத்தமாக இருந்தது.ஆனால் இந்த போட்டியில் ரிஷாப் பண்ட் 71 ரன்கள் அடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.இதை தொடர்ந்து  மத்தியில் இறங்கிய  கேதார் ஜாதவ் அவர் பங்குக்கு 40 ரன்கள் விளாசி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 288 ரன்கள் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷெல்டன் கோட்ரெல் ,கீமோ பால் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

Published by
murugan

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

7 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago