Sanjay Manjrekar Photo Credit: (ICC)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்திய அணி மீண்டும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால், அடுத்தாண்டு நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, அடுத்தாண்டு டி20 உலக கோப்பை ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
இந்த சூழலில், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியிலும், சரியான கட்டமைப்பை உருவாக்கும் வேளையிலும் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் மூத்த வீரர்கள் இல்லாமல், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாடி வருகிறது.
இதனால், டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித், கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இடம்பெறுவர்களா அல்லது தற்போது உள்ளதுபோல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 போட்டியில் விளையாடாத நிலையில், அவர்களுக்கு பதில் யாரை சேர்க்கலாம் என்ற விவாதம் தற்போது எழுந்து வருகிறது.
2 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ் கம்பேக் கொடுத்த ஆண்ட்ரே ரஸ்ஸல்.. முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது!
இந்த நிலையில், , ரோஹித் சர்மாவை விட ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வழிநடத்தி, 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது என முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, பாண்டியாக்கும் ரோஹித்துக்கும் இடையில் டாஸ்அப் இருந்தால், ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டனாகவும், பேட்டராகவும் விளையாட வாய்ப்பு அதிகம்
தேர்வாளர்கள் அல்லது அணி நிர்வாகம் எப்படி சிந்திக்கிறது என்று யாருக்குத் தெரியும் இதுபோன்று, ஹர்திக் பாண்டியா இல்லை என்றால் சூர்யகுமார் யாதவுடன், ரோஹித் சர்மாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நினைக்கிறேன். டி20 உலகக் கோப்பை அணியைத் தேர்வுசெய்யும் நேரம் வந்துவிட்டது.
நல்ல ஃபார்மில் இருக்கும் அணியை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம், இது இந்திய டி20 அணியில் கேப்டனில் தொடங்கி ஒவ்வொரு வீரர்களின் நிலையிலும் இருக்க வேண்டும் என்றுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…