Photo: Twitter Suresh Raina (Main Image)
2024 ம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திரும்பியுள்ளதால் லக்னோ அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் தொடரில் மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
209 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய சுரேஷ் ரெய்னா ஒரு சதம், 39 அரைசதங்கள் உட்பட 5528 ரன்கள் விளாசி உள்ளார். மேலும், 203 சிக்ஸர்கள் மற்றும் 25 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த ஐபிஎல் போட்டிகளில் சுரேஷ் ரெய்னா வர்ணனையாளரகவும் செய்யப்பட்டார். ரெய்னாவை “சின்ன தல”என சிஎஸ்கே ரசிகர்கள் அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…