இன்று தென்னாப்பிரிக்கா – இந்திய அணி இடையேயான மூன்றாவது (கடைசி) டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்து. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே சுப்மன் கில் 12 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த திலக் வர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 29 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்தது. பின்னர் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் இருவரும் கூட்டணி அமைத்து சரிவில் இருந்த அணியை மீட்டுக் கொண்டு வந்தனர். இதில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 41 பந்தில் 60 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார். பின்னர் வந்த ரிங்குசிங் வந்த வேகத்தில் 14 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் சதம் விளாசி 100 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். சூரியகுமார் யாதவ் 56 பந்தில் 8 சிக்ஸர், 7 பவுண்டரி விளாசினார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா அணியில் கேசவ் மகாராஜ், லிசாட் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டையும், தப்ரைஸ் ஷம்சி, நந்த்ரே பர்கர் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…