இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக இருந்த யுவராஜ் சிங் கடந்த ஆண்டு அனைத்து விதமான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 போட்டிகளில் விளையாடினார். தற்போது ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயிக்கு நிதி திரட்டும் வகையில், நடைபெற்ற புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங் கலந்துகொண்டு விளையாடினார். கடந்த 2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்சர்களை அடித்து சாதனை படைத்தார். மேலும், 20 ஓவர் சர்வதேச போட்டியில் 12 பந்தில் அரை சதத்தை அடித்து சாதனை புரிந்தார்.
இந்நிலையில், 20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று யுவராஜ்சிங் தற்போது தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ரோஹித் சர்மா, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் இவர்கள் மூவரும் டி20 போட்டியில் இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளது, ஆனால் இதில் இருவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர் என தெரிவித்தார். மேலும், 20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என்று என்னால் சொல்ல முடியும். தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை பார்க்கும் போது முடியாதது எதுவுமில்லை, அதனால் காத்திருப்போம் என்றும் சிறந்ததை எதிர்பார்ப்போம் என்றும் தெரிவித்தார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…