டிஎன்பிஎல் தொடரில் ரூ.225 கோடிக்கு சூதாட்டம்..!

Published by
murugan
  • டிஎன்பிஎல் தொடர் முடிந்த பின்  சில வீரர்கள்,  ஒரு பயிற்சியாளர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு  இருந்ததாக செய்திகள் வெளியானது.
  • பின்னர் பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவை சேர்ந்த அஜித் சிங் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
  • திண்டுக்கல்லில்  தூத்துக்குடி மற்றும் மதுரை அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியின் போது 225 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழகத்தை சார்ந்த 8 அணிகள் கலந்து கொண்டன. அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலியில் நடைபெற்றது. இறுதிப்போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

டிஎன்பிஎல் தொடர் முடிந்த பின்  சில வீரர்கள்,  ஒரு பயிற்சியாளர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு  இருந்ததாக செய்திகள் வெளியானது.அதைத் தொடர்ந்து பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவை சேர்ந்த அஜித் சிங் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்தினர்.அதன் பின் எந்தவித செய்தியும் வெளியாகாத இருந்த நிலையில் கங்குலி சில நாட்கள் முன்பு டிஎன்பிஎல் தொடரில் இரு அணிகள் தடை செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால், அது உண்மை இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் திண்டுக்கல்லில்  தூத்துக்குடி மற்றும் மதுரை அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியின் போது 225 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த இரு அணிகளையும் தகுதி நீக்கம் செய்ய பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Published by
murugan

Recent Posts

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 hours ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

4 hours ago