டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்.!என் மீதான விமர்சனங்கள் என்னை பாதிக்காது- சிந்து பேட்டி.!

Published by
murugan
  • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு 7 போட்டிகளில்  வரிசையாக தோல்வியை தழுவினார்.
  • நேற்று டெல்லியில் பி.வி சிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது நிச்சயமாக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வேன் என கூறினார்

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்றார். அதன் பின்னர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று டெல்லியில் பி.வி சிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது, அதற்கு அனைத்திற்கும் பதில் அளித்தார்.அப்போது பேசிய பி.வி சிந்து உலக சாம்பியன் பட்டம் வென்றது எனது பேட்மிட்டன் பயணத்தில் சிறப்பு வாய்ந்ததாகும்.

பின்னர் விளையாடிய  அடுத்தடுத்த போட்டிகளில் முதல் சுற்றிலேயே வெளியேறினேன். ஆனாலும் மனம் தளரவில்லை. நேர்மறை எண்ணத்துடனேயே செயல்பட்டேன்.அனைத்துப் போட்டிகளும் தொடர்ந்து வெற்றிகளை ஒருவரால் பதிவு செய்ய முடியாது. சில போட்டிகளில்  புத்திசாலிதனமாக விளையாடலாம்.

சில போட்டிகளில் தவறாக விளையாடலாம் என கூறினார். விளையாட்டில் நான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வருகிறேன். நான் அனைத்து போட்டிகளில் வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்பு இருக்கின்றன. இது நிறைவேறாத பட்சத்தில் எனக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அந்த விமர்சனங்களும், எதிர்பார்ப்புகளும் என்னை பாதிக்காது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன்.இதற்காக பல்வேறு உத்திகளுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். நிச்சயமாக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வேன் என கூறினார்.

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு 7 போட்டிகளில்  வரிசையாக தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

2 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

3 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

3 hours ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

4 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

4 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

5 hours ago