தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள போட்டியான பிக்பாஷ் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 29-ம் தேதி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் Vs அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் நடுவர் செய்த ஒரு காரியம் ரசிகர்கர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதாவது மெல்போர்ன் ரெனிகேட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது போட்டியின் 17-வது ஓவரை அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வீரர் ரஷீத் கான் வீசினார்.அப்போது பேட்டிங் செய்த வெப்ஸ்டர் அடித்து விளையாடும் போது பந்து பேட்டில் பட்டது.
இதனால் ரஷீத் கான் அவுட் கேட்க களத்திலிருந்து நடுவர் கிரேக் டேவிட்சன் முதலில் அவுட் கொடுப்பது போல கையை தூக்கி பின்னர் தனது மனதை மாற்றிக் கொண்டு மூக்கை சொறிந்தார்.
இதனால் விக்கெட்டை வீழ்ந்த மகிழ்ச்சியில் ரஷீத் கான் மற்றும் சக வீரர்கள் கொண்டாடினர். பின்னர் அவுட் இல்லை என தெரிந்ததும் கோபப்பட்டார். அதன் பின்னர் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வீரர்கள் சிலர் நடுவரிடம் இது குறித்து கேட்டனர். அப்போது நடுவர் பேட் என்பது போல் சைகை காட்டினார்.
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…