கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிப்பதற்கு அவசரமாகத் தேவையான மூலப்பொருள் உடனடியாக இந்தியாவுக்குக் கிடைக்கும் என்று வெள்ளை மாளிகை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இன்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் தொலைபேசியில் பேசினார், சமீபத்தில் அதிகரித்து வரும் கொரோனாவின் காரணமாக இந்திய மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.அமெரிக்கா இந்திய மக்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என்று ஜேக் சல்லிவன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
கொரோனா தொற்றின் ஆரம்பத்தில் எங்கள் மருத்துவமனைகள் சிரமப்பட்டதால் இந்தியா அமெரிக்காவிற்கு உதவி அனுப்பியது போலவே, அமெரிக்காவும் தேவைப்படும் நேரத்தில் இந்தியாவுக்கு உதவுவதில் உறுதியாக உள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியத் தயாரிப்புக்கு அவசரமாகத் தேவையான குறிப்பிட்ட மூலப்பொருட்களின் ஆதாரங்களை அமெரிக்கா கண்டறிந்துள்ளது, அவை உடனடியாக இந்தியாவுக்குக் கிடைக்கும் ”என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், இந்தியாவில் முன்னணி சுகாதார ஊழியர்களைப் பாதுகாப்பதற்கும், அமெரிக்கா உடனடியாக சிகிச்சை முறைகள், விரைவான நோயறிதல் சோதனை கருவிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) ஆகியவை இந்தியாவிற்கு உடனடியாக கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று மட்டும் 349,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.2,761 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 192,310 ஆக உயர்ந்துள்ளது
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…