விம்பிள்டன் 2023: நாளை அனல்பறக்கும் இறுதிப்போட்டி… முதல் முறையாக நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்கராஸ் மோதல்!

விம்பிள்டன் டென்னிஸ் முதல் முறையாக நோவக் ஜோகோவிச், உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கராஸ் மோதவுள்ளனர்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறும் 2023ம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிகமுறை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவர் என்ற சாதனையை நோவக் ஜோகோவிச் படைத்துள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 2ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் 6-3, 6-4, 7-6(7-4) என்ற செட் கணக்கில் உலகின் 8ம் நிலை வீரரான ஜானிக் சின்னரைத் வீழ்த்தி 9வது முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டியிலும், 35வது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றார். 36 வயதான நோவக் ஜோகோவிச் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக ஒற்றையர் இறுதிப் போட்டியை எட்டிய சாதனையை முறியடித்தார்.
இதற்கு முன்பு கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக ஒற்றையர் (34) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற கிறிஸ் எவர்ட் சாதனையை முறியடித்தார். இதுபோன்று மற்றொரு அரையிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் வெற்றி பெற்று இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் அரையிறுதியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான டேனியல் மெட்வடேவை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
20 வயதான கார்லோஸ் அல்கராஸ் அரையிறுதியில் 6-3, 6-3, 6-3 என்ற கணக்கில் ஒரு மணி நேரம் 50 நிமிடங்களில் வெற்றி பெற்றார். எனவே, ஞாயிற்றுக்கிழமை நாளை நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ், உலகின் இரண்டாம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். விம்பிள்டன் டென்னிஸ் முதல் முறையாக நோவக் ஜோகோவிச், உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கராஸ் மோதவுள்ளனர்.
விம்பிள்டனில் கார்லோஸ் அல்கராஸ், இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சிற்கு எதிராக விளையாட விரும்புவதாக பலமுறை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் தனது முதல் விம்பிள்டன் இறுதிப் போட்டியில், உலகின் நம்பர். 2 ஜோகோவிச்சை சந்திக்கிறார். இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.