ஆசிய விளையாட்டு போட்டிகள்.! ருதுராஜ் தலைமையில் சிவம் துபே, ஜெய்ஸ்வால் உடன் இளம் கிரிக்கெட் அணி அறிவிப்பு.!

சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்காக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிவம் துபே, ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கிய இளம் கிரிக்கெட் அணி களமிறங்க உள்ளது.
சீனாவில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரையில் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் விளையாடபட்டாலும் அதில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. தற்போது தான் பிசிசிஐ இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும், பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் அனுமதி அளித்துள்ளது.
இதில் இந்திய அணி சார்பில் விளையாடும் இளம் இந்திய வீரர்களுக்கு கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிப்பட்டுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் சிங், அர்ஷ்தீப் கான் , முகேஷ் குமார், சிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.