தன்னை தாக்கிய சிறுத்தையை பைக்கில் கட்டி தூக்கி வந்த கிராமத்து இளைஞர்.! அதிர்ச்சியில் கர்நாடக வனத்துறை.!

தன்னை தாக்கிய சிறுத்தையை பைக்கில் கட்டி தூக்கி வந்த கர்நாடக கிராமத்து இளைஞர். பின்னர் சிறுத்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஹாசன் பாகிவாலு எனும் கிராமத்தில் முத்து வேணுகோபால் எனும் இளைஞர் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை வயல்வெளிக்குசென்ற போது அங்கு சிறுத்தை ஒன்று இந்த இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்பு கருதி அந்த சிறுத்தையை தாக்கி அதன் கால்களை கயிற்றால் காட்டியுள்ளார்.
பின்னர் அதனை தனது இருசக்கர வாகனத்தில் கட்டிவைத்து அதனை கிராமத்திற்குள் கொண்டு சென்றுள்ளார்.பின்னர், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து சிறுத்தையை மீட்டு முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வனவிலங்குகளை தாக்குவது குற்றம் என்றாலும், தற்காப்புக்காக அந்த இளைஞர் தாக்கியது குற்றமாகாது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை தாக்கிய அந்த இளைஞரும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார்.