காமராஜர் 120வது பிறந்தநாள் விழா.! சென்னை பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை.!

Kamarajar - CM MK.Stalin

சென்னை, நங்கநல்லூர் மேல்நிலை பள்ளியில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். 

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. பள்ளிக்குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவு திட்டங்களை செயல்படுத்திய காமராஜரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

இன்று சென்னை நங்கநல்லூர் ஆண்கள் பள்ளியில் நடைபெரும் காமராஜர் பிறந்தநாள் விழாவான கல்வி வளர்ச்சி நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர், கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு , உதவி தொகை ஆகியவற்றை வழங்கினார். மேலும் சுமார் 7000 புத்தகங்களை நூலக பிரிவுக்கு அளித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்