டாஸ்மாக் கடை காலையில் திறப்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.!

டாஸ்மாக் கடை திறப்பது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
தமிழக அரசு காலை சீக்கிரமே மதுக்கடையை திறப்பது குறித்து யோசனையில் இருந்ததாகவும், மக்களின் எதிர்ப்புகளைப் பார்த்த பின்பு அதனை மாற்றிக்கொண்டதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூறினார். விடியல் விடியல் என்று கூறிக்கொண்டு விடியற்காலையில் மதுக்கடையை திறப்பதற்கான முயற்சியில் இருந்த அரசை விமர்சித்துள்ளார்.
மேலும் அதிமுக கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் குறித்து கேட்கப்பட்ட போது, அவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுக்கும் பட்சத்தில் அதனை பரிசீலிப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் தான் முடிவெடுப்பார் என கூறியுள்ளார். செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாகவும் கருத்து தெரிவித்த ஜெயக்குமார், தற்போது கூட டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் பெறப்படுவதாகவும், சமீபத்தில் காவல் அதிகாரி ஒருவரை அடித்த வீடியோ இணையதளத்தில் வைரலானதை குறிப்பிட்டு பேசினார்.