[image source:x/kssiddhu]
மகளிருக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் ஸ்டேடியத்தில் அக்டோபர் 27ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டி நவம்பர் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சிறப்பாக செயல்பட்டு தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் இந்தியா 2-1 கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இதனைத்தொடர்ந்து நடப்பு சாம்பியனான ஜப்பானை நேற்று இரவு இந்திய ஹாக்கி மகளிர் எதிர்கொண்டது. இப்போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
2023 பலோன் டி’ஓர் விருது : சிறந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி.!
இந்த நிலையில், நேற்றிரவு நடந்த போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியில், நவ்னீத் கவுர் (31-வது நிமிடம்) சங்கீதா குமாரி (47-வது நிமிடம்) கோல் அடித்து அசத்தினர். இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டியில் தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மேலும், நடப்பு சாம்பியன் ஜப்பான் ஹாக்கி மகளிர் அணி 3 வெற்றி, ஒரு தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அணி ஏற்கனவே அரை இறுதியை எட்டிவிட்ட நிலையில், தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்கொரியாவை நாளை சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…