அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டத்தை தூண்டுபவர்களுக்கு துணை போகக்கூடாது: ஓ.பன்னீர்செல்வம்.!
சட்டப்பேரவையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டம் குறித்து பேசியதாவது:- 2017-18ஆம் ஆண்டில், மாநில அரசு பெற்ற மொத்த வரி வருவாய் 93,795 கோடி ரூபாயாகும். இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பள செலவு மட்டும் 45,006 கோடி ரூபாயாகும். இது தவிர, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகை 20,397 கோடி ரூபாய் என மொத்தம் 65,403 கோடி ரூபாய் நிர்வாகத்தை நடத்தும் அரசு ஊழியர்களுக்காக சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது. […]