7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தேர்வு முடிவு குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் (எட்ஜ்பாஸ்டன், ஜூலை 2, 2025) உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. முன்னதாகவே, அவருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு கொடுக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. […]