நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப் பட்டுவாடாவை கண்காணிக்க சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவித்தார். நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மாநில தேர்தல் ஆணையர் வெளியிட்டார். […]