வரும் முன் காப்போம் திட்டத்தை சேலம் வாழ்ப்பாடியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் சென்ற முதல்வர் முக ஸ்டாலின், வாழப்பாடி அரசு பள்ளியில் நடைபெற்று வரும் விழாவில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடர்ந்து, வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி ஆட்சி காலத்தில் வருமுன் காப்போம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. […]