வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்!

வரும் முன் காப்போம் திட்டத்தை சேலம் வாழ்ப்பாடியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் சென்ற முதல்வர் முக ஸ்டாலின், வாழப்பாடி அரசு பள்ளியில் நடைபெற்று வரும் விழாவில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடர்ந்து, வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி ஆட்சி காலத்தில் வருமுன் காப்போம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏழை, எளிய மக்களை நோய் பாதிப்பியிலிருந்து முன்கூட்டியே தடுக்கும் விதத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது. 2530 பயனாளிகளுக்கு ரூ.24.73 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
மேலும், 100% தடுப்பூசி இலக்கை அடைந்த ஊராட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் சான்றுதலும் வழங்கினார். இந்த விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.